நாடு கடத்தப்படலாம் என அஞ்சும் தமிழகம் வாழ் ஈழத் தமிழர்கள்!

புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதால் கவலை



By:

Submitted: 2019-12-15 05:26:01

இலங்கை இன வன்முறைகளில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்கள் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் வன்முறைகளில் இருந்து தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகள் பலர் பல ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகின்றனர். மேலும் பல அகதிகள் இந்தியாவிலேயே பிறந்தவர்கள். எனினும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்க புதிய குடியுரிமைச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

தமிழகம் - கோயம்புத்தூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகளுக்கான பூலவப்பட்டி முகாமில் வசிக்கும் சிவா என்பவர் 1990 களில் இலங்கையில் இருந்து தப்பி பெற்றோருடன் தமிழகம் வந்தவர்.

நாங்கள் இங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பும் கூட எங்களுக்கு குடியுரிமை வழங்குமாறு கோரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஒரு விண்ணப்பத்தை கொடுத்தோம்.

ஆனால் இப்போது எங்களுக்கு குடியுரிமை இல்லை என்பது தெளிவாகிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பிரகாரம் எங்களுக்குக் குடியுரிமை கிடையாது என அதிகாரிகள் கூறுகின்றனர் என சிவா தெரிவித்துள்ளார்.

சிவா மட்டுமன்றி சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டை தங்கள் வீடாகவே கருதி பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பல இலங்கை தமிழ் அகதிகள் அச்சமடைந்துள்ளனர். தாங்கள் நாடு கடத்தப்படலாம் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம்களையும் இலங்கைத் தமிழர்களையும் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் வகையில் இந்திய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பாராளுமன்ற இரு அவைகைளிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் முன்வைக்கப்பட்ட இந்தச் சட்டத் திருத்தத்தை பாரதீஜ ஜனாதா, அதிமுக மற்றும் ஜனதா தளம் போன்றவற்றின் உறுப்பினர்கள் ஆதரித்ததால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் பார்சிகள் இந்தப் புதிய சட்டத்தின் மூலம் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும்.

இதனைவிட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமையைப் பெறவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது.

ஆனால் இந்தச் சட்டம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம்களை முற்றுமுழுதாக புறக்கணித்துள்ளது.

70 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து இலங்கையில் பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களில் இருந்து தப்பியோடிய தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 62,000 இலங்கை தமிழர்கள் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள சுமார் 107 அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.

மேலும் 36,000 இலங்கைத் தமிழ் மக்கள் முகாம்களுக்கு வெளியே வாழ்கின்றனர்.

கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான அகதிகள் மதுரையில் வாழ்கின்றனர்.

2009 -இல் யுத்தம் முடிவடைந்தபோதும் சுமார் 3,000 அகதிகள் மட்டுமே இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் தொடர்ந்தும் இந்தியாவில் வாழ்கின்றனர்.

தாங்கள் இலங்கைக்கு திரும்பி அனுப்பப்பட்டால் தங்களின் எதிர்காலம் மோசமாக அமையும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.

2016 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குமாறு இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை கோருவதுடன், இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழ தனி அரசு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஆனால் இதே தலைமையில் வந்த அதிமுக அரசின் 11 எம்.பி.க்களும் இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததுள்ளனர்.

இந்தச் சட்டத்திருத்தம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை முற்றாகப் புறக்கணிக்கிறது என்பதை அறிந்துகொண்டு அவர்கள் இதனை ஆதரித்துள்ளனர்.

அதனால் மாநிலங்களவையில் இந்தச் சட்டத் திருத்தம் 125 வாக்குகளை பெற்று நிறைவேறியது. இதற்கு எதிராக 105 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கோயம்புத்தூரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முகாமில் சிறிய வீடுகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் தங்குவதற்கு மட்டுமே அவர்களுக்கு சில வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை இல்லாததால் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் வேலைவாய்ப்புக்களை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

நாங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் எங்களை அகதிகள் அல்லது முகாம்காரர் என்று முத்திரை குத்துகிறார்கள். எங்கள் குழந்தைகளுடன் படிக்கும் மாணவர்கள் கூட அவர்களை மதிக்கவில்லை.

இது நம்முடைய தவறு அல்ல. நாமும் தமிழர்கள் தானே? எங்களை ஏன் இந்தியா கைவிட்டது என அவர்கள் ஏக்கத்தோடு கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகம் வாழ வைக்கும் ஒரு மாநிலம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இங்கு 30 ஆண்டுகளாக அகதி என்ற அடைமொழியோடுதான் வாழ்கிறோம் என்கிறார் அதே முகாமைச் சேர்ந்த ரதி.

எங்களுக்கு குடியுரிமை அளித்து, எங்களையும் எங்கள் குழந்தைகளையும் உங்களில் ஒருவராகக் கருதினால் நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் மக்கள் புதிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் புறக்கணிக்கப்படுதாக குரல் எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த இந்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, 1947-ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கட்சிகளின் தலைமையிலான இந்திய அரசு இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.

முதலில் 4.6 இலட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. பின்னர் 94,000 குடும்பங்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது. எனினும் அவர்களில் பலர் இலங்கைக்கே மீளத் திரும்பிச் சென்றனர் எனச் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் யாருக்கும் அநீதி இழைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, இனப்படுகொலையில் தங்கள் வீடுகளையும் வாழ்க்கையையும் இழந்த தமிழ் மக்கள் பலர் இந்தியாவில் என்றென்றும் வாழ தாங்கள் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

நாங்கள் நிரந்தரமாக வாழ இங்கு வரவில்லை. அகதிகளாக வந்தோம். உலகெங்கிலும் உள்ள அகதிகள் ஒரு நாட்டிற்குள் நுழைவதைப் போலவே நாங்கள் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளோம். மீண்டும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு வாழ்கிறோம். எனினும் அதற்கான சூழல் அமைய வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Updated: 2019-12-15 06:45:27

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact