Thursday 21st of October 2021 12:35:02 PM GMT

LANGUAGE - TAMIL
திருமணத்துக்காக கட்டாயப்படுத்தி இலங்கை அழைத்துவர முற்பட்ட பெண் ஜேர்மனில் மீட்பு!

திருமணத்துக்காக கட்டாயப்படுத்தி இலங்கை அழைத்துவர முற்பட்ட பெண் ஜேர்மனில் மீட்பு!


கட்டாய திருமணத்திற்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த அகதிப் பெண் ஒருவர் இறுதிநேரத்தில் விமானத்தில் வைத்து ஜேர்மனி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக DW செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இது குறித்த தகவல்களை திங்கட்கிழமை பொலிஸார் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளனர். 21 வயதுடைய அப்பெண்ணின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

குறித்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரைத் திருமணம் செய்துகொடுக்கும் நோக்கில் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்வதற்காக விமான பயணத்துக்கு ஆயத்தமாகினர்.

ஆனால் இவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக அப்பெண்ணை அவதானித்த டுஸ்ஸெல்டார்ஃப் (Düsseldorf) விமான நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகமடைந்தார். இதனையத்து விமானியின் அனுமதியைப் பெற்று விமானத்திற்குள் சென்ற அவர் அப்பெண்ணுடன் பேசியுள்ளார்.

அப்போது அந்தப்பெண் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக யாரோ ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து கொடுப்பதற்காக குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக தன்னை அழைத்துச்செல்வதாக கூறியுள்ளார்.

அதன் பின் உடனடியாக அப்பெண்ணை அழைத்துச்சென்ற பொலிஸ் அதிகாரி, பெண்கள் காப்பகம் ஒன்றில் அவரை ஒப்படைத்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE