Friday 29th of March 2024 05:08:36 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -12.01.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -12.01.2020


மேஷம்

மேஷம்: சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டிற்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. பொறுமைத் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை சாதித்து கொள்வீர்கள். பிள்ளைகள் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

துலாம்

துலாம்: பழைய நல்ல சம்ப வங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கோபத்தை கட்டுப் படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளை கள் கேட்டதை வாங்கித் தருவீர் கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர் கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர் வதால் முன்கோபத்தை குறையுங் கள். உங்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப் படும் நாள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாற்று மதத்தவர் உதவுவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: எந்த செயல்களையும் தீர்க்கமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளில் ஒன்றுதீரும். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறை வேறும் நாள்


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE