Thursday 28th of March 2024 11:13:54 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -13.01.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -13.01.2020


மேஷம்

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக்குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அண்டை அயலாரின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில்கவனம் தேவை. பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். யோகாதியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.புதியவர்களின் நட்பால் உற்சாக மடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் செயல்களில் அலைச்சலும் ஏமாற்றமும் வந்துநீங்கும். மற்றவர்களின் பிடிவாதத் தால் பிரச்சினை கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரிடம் கனிவாக பேசுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி இருக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புகழ் கூடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை தவிர்த்து, அறிவுப்பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதியபாதை தெரியும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE