Thursday 28th of March 2024 12:41:47 PM GMT

LANGUAGE - TAMIL
யாழ்.நகரின் மையப் பகுதியில் பறந்தது சிங்கள பௌத்த கொடி (படங்கள்)

யாழ்.நகரின் மையப் பகுதியில் பறந்தது சிங்கள பௌத்த கொடி (படங்கள்)


சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலஆக்கிரமிப்புக்கான ஆரம்ப புள்ளியாக யாழ்.நகரின் மத்திய பகுதியில் சிங்கள பௌத்த கொடி நிறுவப்பட்டுள்ளது. யாழ். பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் இந்த கொடி நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் செய்திக் குறிப்பு ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நன்கு திட்டமிடப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட கற்களை ஒன்று சேர்த்து ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு பின்னர் ஒரு கம்பியில் இக் கொடி நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் அவ் கொடியின் கீழ் மலர்கள் சூடி வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த கடை வியாபாரிகளுடன் வினாவிய போது இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ள இது நிறுவப்பட்டுள்ளதாகவும் தாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலைங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. ஆனால் அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோ இன் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ்த்தேசத்து நிலங்களினை இவ் வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்தமயமாக்கலுக்கு உட்படுத்தி அதனப் பறித்தெடுகின் செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்துகூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஏன்எனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ அதே அக்கறை எமது தாயகப்பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு இருக்கின்றது.

வரதாரஜன் பார்த்திபன் யாழ்.மாநகர சபை உறுப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE