Saturday 20th of April 2024 05:21:33 AM GMT

LANGUAGE - TAMIL
மட்டு. விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி விரைவில் நடவடிக்கை!

மட்டு. விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி விரைவில் நடவடிக்கை!


மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஜனாதிபதியின் குழுவொன்று எதிர்வரும் வாரம் மட்டக்களப்புக்கு வருகைதரவுள்ளதாக மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் ச.அருண்தம்பிமுத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு – மட்டு ஊடக அமையத்தில் மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் ச.அருண்தம்பிமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடக சந்திபொன்றை நடத்தியிருந்தார்.

ஒரு கிலோ நெல்லினை 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் என்ற முடிவை எடுத்திருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந் நிலை உருவாகவில்லை. வவுணதீவைச் சோர்ந்த விவசாயிகள் எனது காரியாலயம் வருகைதந்திருந்து இந் நிலையை ஜனாதிபதிக்கு எடுத்துச்செல்லுமாறு கூறினர்.

நான் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துரைத்துள்ளேன்; அவர்களும் அதற்கு இணங்கி உடனடியாக நெல் சந்தப்படுத்தும் சபை அடுத்த வாரம் நெல்லினை கொள்வனவு செய்யும் என வாக்குறுதியளித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE