Wednesday 24th of April 2024 05:45:35 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -22.01.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -22.01.2020


மேஷம்

மேஷம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத வேலை ஒன்று முடியும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். நீண்ட நாளாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பும் அறிமுகமும் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சித் தங்கும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத கவலையும் பயமும் வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் உண்டாகும். உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் திறமையாலும் சாதுரியத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும் புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் பெறும் நாள்.

மீனம்

மீனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளை களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல இமேஜ் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE