Saturday 20th of April 2024 04:45:27 AM GMT

LANGUAGE - TAMIL
சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்து கொள்ள வவுனியாவில் இருந்து 7 பேர்!

சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்து கொள்ள வவுனியாவில் இருந்து 7 பேர்!


வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்வதற்காக வவுனியாவில் இருந்து 7 பேர் பாகிஸ்தானுக்குப் பயணமானார்கள்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இவர்கள் நேற்று வியாழக்கிழமை காலை பயணித்தார்கள்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகிய லாகூரில் இந்த சர்வதேச கிக்பொக்சிங் போட்டி நடைபெறவுள்ளது.

இன்று வியாழக்கிழமை ஆரம்பமாவுள்ள இந்தப் போட்டி 26 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் இந்தப் போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்ட அணியில் வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசிகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல், எஸ்.சிறிதர்சன், கெ.நிரோஜன் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 22 பேரில் வடமாகாணம் வவுனியாவைச் சேர்ந்த 7 பேரில் ஆகக் குறைந்த 11 வயதுடைய மாணவன் ஆர்.கே.கெவின் என்பது குறிப்பிடத்தக்கது.

டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராகிய ரட்னகாந்தனின் புதல்வராகிய இவர் வவுனியா இலங்கைத் திருச்சபைத் தமிழ்க்கலவன் பாடசாலையில் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவராவார்.

பாகிஸ்தான் செல்லும் இந்த குத்துச் சண்டை வீரர்களுக்கு வவுனியா நகரசபையின் உபதலைவர் கே.குமாரசாமி தலைமையில் வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் க.சந்திரகுமார்(கண்ணன்), வன்னி மாவட்ட சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மாணிக்கம் ஜெகன், வவுனியா வர்த்தக சங்கத்தின் செயலாளர் அம்பிகைபாலன், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர். இ.நவரட்ணம் மற்றும் நகரசபை ஊழியர் செல்வேந்திரன் ஆகியோர் பயிற்சியாளர் நந்தா hலைமையிலான இந்த குத்துச் சண்டை வீரர்களைப் போற்றி வாழ்த்தினர்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE