Friday 29th of March 2024 10:52:21 AM GMT

LANGUAGE - TAMIL
மன்னாரில் சமூக பொருளாதார கலாச்சார உரிமைகள் தொடர்பில்  விழிப்புணர்வு  கருத்தமர்வு!

மன்னாரில் சமூக பொருளாதார கலாச்சார உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு!


மாவட்ட ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற பெண்கள் அமைப்பு மற்றும் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்களுக்கு அரசியல் சமூக பொருளாதார கலாச்சார உரிமைகள் தொடர்பாக அறிவூட்டும் செயலமர்வு இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்றது.

குறித்த செயலமர்வில் அண்மைக்கால அரசியல் சமூக பொருளாதார கலாச்சார ரீதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் குறித்த அரசியல் சமூக பொருளாதார கலாச்சார விடயங்களில் தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் உள்ள உரிமைகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த செயலமர்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் பிரதீப் வணிக சூரிய மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைமை காரியாலய உறுப்பினர்களான பிரியங்கர கொஸ்தா மற்றும் பிரான்சிஸ் ராஜன் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.

மேலும் இவ் செயலமர்வில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிமுனை , ஜிம்றோன் நகர் , ஜீவபுரம் , சாந்திபுரம் , உப்புக்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நேசக்கரம் பிரஜைகள் அங்கத்தவர்கள் மற்றும் முசலி பிரஜைகள் குழு உறுப்பினர்கள்; உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE