Tuesday 23rd of April 2024 05:01:04 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா வைரஸ்கள்!

கொரோனா வைரஸ்கள்!


கொரோனா வைரஸ்கள் பொதுவாக விலங்குகளில் காணப்படும் ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை.

அரிதான சந்தர்ப்பங்களில் அவை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகின்றன.

இத்தகைய வைரஸ்கள் மிதமான மற்றும் லேசான சளித் தொல்லை மற்றும் மிதமான மற்றும் லேசான மேல் சுவாச குளாய் நோய்களை ஏற்படுத்தும்.

வைரஸ் தொற்கு அறிகுறிகள்

மூக்கு வடிதல், தலைவலி, இருமல், தொண்டைப் புண், காய்ச்சல், சோர்வு என்பன இந்நோய்த் தொற்று அறிகுறிகளாகும்.

பலவீனமானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானோர் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மிக இளம் வயதினரை இந்த வைரஸ் எளிதில் தாக்கும்.

வைரஸ் தொற்றுக்கு ஆட்பட்டோருக்கு நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பாதிப்புக்களும் லேசான மற்றும் மிகவும் தீவிரமான சுவாசக்குழாய் நோய்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இது எவ்வாறு பரவுகிறது?

மனித கொரோனா வைரஸ்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகின்றன.

நோயுள்ள ஒருவர் இருமும் போதும் தும்மும்போதும் காற்று வழியாக இந்நோய் மற்றவர்களுக்குப் பரவும்.

தொடுதல், கைகுலுக்கல் மற்றும் நெருக்கமான தொடர்புகள் மூலமும் இந்நோய் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.

வைரஸ் தொற்றுள்ள ஒரு பொருளைத் தொட்ட பின்னர் கைகளைக் கழுவாமல் இருக்கும் நிலையில் கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் தாக்கம் ஏற்படும்.

அரிதாக மலக் கழிவுகளால் இந்த வைரஸ் தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

தற்காப்பு வழிமுறைகள்

மனித கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க தற்போது தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்த் தொற்றிலிருந்து விடுபட அடிக்கடி சவற்காரம் இட்டுக் கைகளை கழுவுதல் வேண்டும்.

கழுவாத கைகளால் உங்கள் கண்கள், மூக்கு, வாய் என்பவற்றை தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உங்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருங்கள், வீட்டில் தங்கியிருந்து நன்றாக ஓய்வெடுங்கள்.

நோய் அறிகுறிகள் குறித்துக் கவலையடைந்தால் வைத்தியரை நாடுங்கள்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE