Friday 29th of March 2024 05:39:45 AM GMT

LANGUAGE - TAMIL
2 வது அரையிறுதியில் தடுமாறும் நியூசிலாந்து!

2 வது அரையிறுதியில் தடுமாறும் நியூசிலாந்து!


19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டியின் 2வது அரையிறுதி போட்டியில் தடுமாற்றத்துடன் ஆரம்பத்துள்ளது நியூசிலாந்து 19 வயதிற்குட்பட்டோர் அணி.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் 19 வயதிற்குட்பட்டோர் அணி களத்தரடுப்பில் ஈடுபட முடிவெடுத்ததைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து 19 வயதிற்குட்பட்டோர் அணி சற்று முன்னர் 14 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மரியு 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றிய நிலையில் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வைற் 43 பந்துகளை சந்தித்து வெறும் 18 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் கட்டுக் கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறி வருகின்றனர். பங்களாதேஷ் அணியின் சார்பில் றகிபுல் ஹசன் வீசிய நான்கு ஓவர்களில் மூன்று ஓவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக வீசி ஒரே ஒரு ஓட்டத்தை மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இதுவரை வீசப்பட்ட 14 ஓவர்களில் 7 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE