Thursday 25th of April 2024 04:34:41 AM GMT

LANGUAGE - TAMIL
பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்கு 219!

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்கு 219!


19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் தொடரின் 2 அரையிறுதி ஆட்டத்தில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 219 ஐ நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று பங்காதேஷ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்திருந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை எடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறிய நிலையில் வீலர் கிரீனல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75 ஓட்டங்களை பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் இஸ்லாம் 10 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், ஹ{சைன் மற்றும் முரட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தார்கள்.

பங்களாதேஷூக்கு ஆரம்பமே அதிர்ச்சி!

219 என்ற எளிதான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடத் தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தன்ஷிட் ஹசன் 3 ஓட்டங்களுடனும் ஹ{சைன் எமோன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE