Thursday 28th of March 2024 04:17:39 PM GMT

LANGUAGE - TAMIL
பிரபு சாலமனின் 'காடன்' ஏப்ரல்-2 இல் வெளிவருகிறது!

பிரபு சாலமனின் 'காடன்' ஏப்ரல்-2 இல் வெளிவருகிறது!


பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் பாகுபலி புகழ் ராணா-விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள 'காடன்' திரைப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் திரைப்படத்தை இயக்கி நீண்ட இடைவெளியாகியுள்ள நிலையில் 'காடன்' திரைப்படம் அவரது காத்திரமான மீள் வருகையாக இருக்கும் என்பதை படம் தொடர்பான தகவல்கள் கட்டியம் கூறுகின்றன.

இவர் இயக்கிய 'மைனா' திரைப்படம் ரசிகளின் அமோக ஆதரவைப் பெற்றதுடன் தமிழ்நாட்டு அரசின் விருதையும் பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவை வைத்து 'கும்கி' என்ற படத்தையும் இயக்கியிருந்தார் பிரபு சாலமன். இப்படமும் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் பின் கயல் மற்றும் தொடரி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார் பிரபு சாலமன்.

நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது இவர் இயக்கி இருக்கும் திரைப்படம் தான் "காடன்" இத்திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தியில் "ஹாத்தி மேரே சாத்தி" என்றும் தெலுங்கில் ஆரண்யா என்ற பெயரிலும் உருவாகியுள்ளது. இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

ஓஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி மற்றும் பிரமாண்ட படைப்பாக வெளிவந்த பாகுபலி புகழ் ராணா ஆகியோருடன் பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இணைந்து உருவாக்கியிருக்கும் 'காடன்' திரப்ப்படம் தமிழ் சினிமா எல்லை கடந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பற்றி பிரபு சாலமன் கூறுகையில்,

இப்படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஹீசைன் போன்றோர் நடித்துள்ளனர். படத்தில் யானை தான் ஹீரோ. யானையின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த உன்னி கிருஷ்ணணை தான் கும்கி படத்திலும் பயன்படுத்தினோம். விஷ்ணு விஷால் யானை மீது ஏறி உட்கார பல தடவை பயிற்சி எடுத்தார். உன்னி யானையால் மட்டும் தான் இந்தியா சினிமாவில் நடிக்க முடியும். அந்த யானைக்கு தான் தகுந்த சான்றிதழ் உள்ளது.

ஏழு அடர் காடுகளில் 200 நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு!

7 அடர்ந்த காடுகளில் 200 நாட்களுக்கு மேல் இப்படத்தை படமாக்கினோம். முக்கிய காட்சிகளை தாய்லாந்து மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டது. ஜாதவ் பியான் தான் இந்த கதை அமைய காரணம் அவரை வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளேன். பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கதை இதனை படமாக எடுத்துள்ளேன் என கூறினார் இயக்குனர் பிரபு சாலமன்.

ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு இந்த படம் ஒரு சிறந்த கம்பெக் ஆக அமையும் என்று ரசூல் பூக்குட்டியின் உழைப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது என்றும் பேசினார் இயக்குனர் பிரபு சாலமன்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE