Friday 29th of March 2024 09:23:54 AM GMT

LANGUAGE - TAMIL
பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது ‘சூரரை போற்று’ பாடல்!

பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது ‘சூரரை போற்று’ பாடல்!


சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வெளிவரக் காத்திருக்கும் ‘சூரரை போற்று’ படத்தின் பாடல் விமானத்தில் பறந்தபடியே வெளிட்டு வைக்கப்பட்டுள்ளது.

விமானியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்பதால் விமானத்தில் பந்தவாறே பாடல் வெளியீட்டை நடத்துவதற்கு படக்குழுவினர் வித்தியாசமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதுவரை விமானத்தில் பறக்காத 100 மாணவர்களை சூர்யாவின் அகரம் பவுண்டேசன் ஊடாக தெரிவு செய்து அவர்களை விமானத்தில் ஏற்றி பறந்தபடியே இசை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் சுமார் 40 நிமிடங்கள் நீடித்த விமானப்பறப்பில் இணைந்திருந்த 100 மாணவர்களது பரவசத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

உலக சினிமாவில் முதல்முறையாக பறக்கும் விமானத்தில் நடாத்தப்பட்ட இவ் இசைவெளியீட்டு நிகழ்வின் போது சூர்யா, ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் அஜித் சிங், சிவகுமார், படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா உட்பட பலர் கந்துகொண்டிருந்தனர்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE