Thursday 25th of April 2024 02:19:56 AM GMT

LANGUAGE - TAMIL
கூலித்தொழிலாளிக்கு லொட்ரியில் 30 இலட்சம் பரிசு!

கூலித்தொழிலாளிக்கு லொட்ரியில் 30 இலட்சம் பரிசு!


கேரளா அரசின் லொட்ரியில் கூலித் தொழிலாளிக்கு 30 இலட்சம் பரிசு விழுந்துள்ளது. கடன் காரணமாக வீடு பறிபோகவிருந்த நிலையில் தேடிவந்த அதிஷ்டமாக இது அமைந்து அவரது வீட்டை காப்பாற்றியுள்ளது.

கேரளா மாநிலத்தின் கண்ணூர் அருகே உள்ள மட்டனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜன் (வயது-54) அண்மையில் கேரள அரசின் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்திய பம்பம் லொட்ரியை வாங்கியுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற குலுக்கலில் ராஜனுக்கு 12 இலட்சம் பரிசு (இலங்கை மதிப்பில் 30 இலட்சம்) விழுந்துள்ளது.

இத்தகவலை அறிந்து ஆனந்தக் கண்ணீரை வடித்த ராஜன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இவருக்கு ரஜனி என்ற மனைவியும் ஆதிரா, விஜில் மற்றும் அஷரா ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது மகளின் திருமணத்திற்காக 4 வருடங்களுக்கு முன்னதாக வீட்டை அடமானம் வைத்து வங்கியில்2 இலட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதேபோல் வீட்டை கட்டுவதற்கு 4 வங்கிகளில் 7 இலட்சம் கடன் வாங்கியிருந்தேன். இதனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டேன்.

இந்நிலையில் மகளின் திருமணத்திற்கு வங்கியில் வாங்கியிருந்த கடனுக்கான வட்டியை கட்டாததால் வீட்டை ஜப்தி செய்ய கடந்த செவ்வாய் கிழமை நோட்டீஸை வங்கியில் இருந்து வழங்கியிருந்தனர். அதை வாங்கிக் கொண்டு வரும் போதுதான் கேரள அரசின் லாட்ரி ரிக்கெட்டை 300 ரூபா கொடுத்து வாங்கியிருந்தேன். அந்த லொட்ரிக்கே 12 இலட்சம் பரிசு விழுந்துள்ளது என்றார்.

இத்தொகையில் வருமான வரியாக 30 சதவிகிதமும் முகவர் தரகு பிடித்தமாக 10 சதவிகிதம் என 40 சதவிகிதம் கழித்து மிகுதி கொடுக்கப்படும். எஸ்ரி 269609 என்ற இலக்கமுடைய லொட்ரி ரிக்கெற்றை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். தொடர்ந்து லொட்ரி ரிக்கெட் வாங்கும் பழக்கம் இல்லை எனவும் எப்போதாவது வாங்குவதாகவும் ராஜன் கூறியுள்ளார்.

கடனில் மூழ்கி வீட்டை இழந்து தெருவுக்கு வர இருந்த ராஜன் குடும்பத்திற்கு லொட்ரி ரிக்கெட் மூலம் அதிஸ்டம் அடித்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE