Tuesday 23rd of April 2024 05:24:06 PM GMT

LANGUAGE - TAMIL
டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க போராடும் அஷ்வின்!

டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க போராடும் அஷ்வின்!


நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்கு சூழல் பந்து வீச்சாளர் அஷ்வின் கடுமையாக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அஷ்வின் தள்ளப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 இற்கு 20 தொடரை 5.0 என கைப்பற்றி பலமான நிலையில் இருந்த இந்திய அணி அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர் ஒருநாள் தொடரை 3.0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளதன் வெளிப்பாடாக நடைபெறவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்கு பலமான அணியை கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னணியில்தான் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினின் இடம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில் ஒரு சுழற் பந்துவீச்சாளருடன் களமிறங்கவுள்ளதால் அந்த இடத்திற்கு ஜடேஜாவுடன் போட்டி போட்டு தனது இடத்தை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் அஷ்வினுக்கு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 20 இற்று 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கே அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எப்படி இருந்தாலும் நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்தில் தனது அதீத திறமையை வெளிப்படுத்துவதன் மூலமே ஆடும் 11 பேர் கொண்ட அணியில் அஷ்வினால் இடம்படிக்க முடியும்.

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி விபரம். விராட் கோலி, மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே, விரித்திமான் சாஹா, ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி மற்றும் ஷூப்மன் கில்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE