Wednesday 24th of April 2024 08:38:15 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -15.02.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -15.02.2020


மேஷம்

ரிஷபம்: குடும்பத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். திறமையாக செயல்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: வருங்காலத்திற்கு தேவையான புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில விஷயங்கள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத விஷயங்கள் முடியும். தாயாருடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழல்கள் உருவாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எந்த விஷயத்திலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் முயற்சிகள் பலிதமாகும். நன்மைகள் நடக்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தடைபட்ட விஷயங்கள் அனைத்தும் உடனே முடியும். பண வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் வீண்கவலைகளும், பயமும் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சலுகைகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் செயல்பாடுகளில் சிறுசிறு தடைகளும் பிரச்சினைகளும் வந்து நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தாமதமாக முடியும். நண்பர்கள் வகையில் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை உயரும். பாராட்டுப் பெறும் நாள்.

மகரம்

மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும் திறமையும் அதிகரிக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். உதவிகள் கிட்டும் நாள்

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அமைதியான சூழல் உருவாகும். நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு கிடைக்கும் மாற்றங்கள் நிறைந்த நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் வீண் பிரச்சனைகள் உருவாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE