Friday 19th of April 2024 06:21:04 PM GMT

LANGUAGE - TAMIL
2வது ரீ-20 யில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!

2வது ரீ-20 யில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது ரீ-20 போட்டியில் மொயின் அலியின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1 க்கு 1 என சமன் செய்துள்ளது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ரீ-20 போட்டி தொடரில் விளையாடி வருகின்றது.

முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2 வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 204 ஒட்டங்களை எடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ரோய்-40, பென்ஸ் ஸ்ரோக்ஸ்-47, வெய்ற்ஸ்ரோவ்-35 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 5வது வீரராக களமிறங்கிய சகலதுறை ஆட்டக்காறரான மெய்ன் அலி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் நான்கு 6 ஓட்டங்களையும், மூன்று 4 ஓட்டங்களையும் விளாசி 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

பந்துவீச்சில் நிகிடி 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தார்.

205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி இறுதிவரை போராடி 2 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. 3 பந்துகளில் 5 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஆடிய தென்னாபிரிக்க அணியின் இரண்டு விக்கெட்டுக்களை அடுத்தடுத்து வீழ்த்தி ரொம் கரன் தென்னாபிரிக்க பக்கமிருந்த வெற்றியை இங்கிலாந்தின் பக்கமாக மாற்றியமைத்திருந்தார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் குயின்டக் டீ கொக்-65, டௌசன்-43 மற்றும் பவுமா-31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் ரொம் கரன், ஜோர்டன், வூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டத்தின் நாயகனாக மொய்ன் அலி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE