Friday 29th of March 2024 12:45:30 AM GMT

LANGUAGE - TAMIL
பாரிஸ் மாநகர மேயர் போட்டியில் களமிங்கும் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின்!

பாரிஸ் மாநகர மேயர் போட்டியில் களமிங்கும் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின்!


பிரான்ஸ் - பாரிஸ் மாநகர மேயர் போட்டியில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சியால் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் களமிறக்கப்படவுள்ளார்.

முன்னர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மக்ரோனின் நெருங்கிய சகாவான பெஞ்சமின் க்ரைவாக்ஸ் பெண்ணொருவருக்கு பாலியல் வீடியோக்களை அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர் தானாகவே போட்டியில் இருந்து வெளியேறினார்.

இதனையடுத்தே பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசினை களமிறக்க மக்ரோன் திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.

இது குறித்து எங்கள் கட்சி கூடி தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் என தான் நம்புவதாக மேயர் வேட்பாளராக களமிங்குவார் என எதிர்பார்க்கப்படும் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் தெரிவித்தார்.

இதேவேளை, பாரிஸ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனில் நெருங்கிய சகாவான பெஞ்சமின் க்ரைவாக்ஸ் பெண்ணொருவருக்கு பாலியல் வீடியோக்களை அனுப்பியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு மக்ரோனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE