Wednesday 1st of April 2020 10:26:40 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -19.02.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -19.02.2020


மேஷம்

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் தடைப்பட்ட விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய மாற்றங்கள் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் முதலில் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுடன் வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் வளைந்து கொடுத்துப் போங்கள். மற்றவர்களின் பேச்சைநம்பி செயல்பட வேண்டாம். வியாபாரத்தில் பழையசரக்குகளை விற்க போராட வேண்டி யிருக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும்.வியாபாரத்தில் லாபம் இரட்டிப் பாக வரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அண்டை அயலாரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். யோகா, தியானம் மூலம் மன அமைதியை தேடுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து. உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரவகையில் நன்மை உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். வராது என்றிருந்தபணம் கைக்கு வந்து சேரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற கவலையும் டென்ஷனும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் அதிருப்தி ஏற்படும். உத்தியோகத் தில் உங்கள் செயல்களில் பொறுமை தேவை. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்

மகரம்

மகரம்: வீண் செலவுகள் அதிகரிக்கும். சிறுசிறு பிரச்சினைகளும் மறைமுக எதிர்ப்புகளும் வந்து போகும். மற்றவர்களால் தேவையற்ற மனக் குழப்பத்திற்கு உள்ளாகுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கவனமாக கையாளுங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை கண்டுபிடிப்பீர்கள். உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத் தில் உங்கள் செயல்கள் மற்றவர்களால் பாராட் டப்படும். புகழ் கூடும் நாள்.

மீனம்

மீனம்: எடுத்த காரியத்தை முடிப்பதில் கவனமாக செயல்படுவீர்கள். திடீர் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உத்தியோகத்தில் உயர்வும் ஏற்படும். சாதிக்கும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE