Thursday 28th of March 2024 01:11:35 PM GMT

LANGUAGE - TAMIL
கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடக்கம்!

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடக்கம்!


சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின் 6ம் கட்ட அகழ்வுப் பணியை நேற்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழர்களின் வைகைக்கரை நாகரீத்தின் தொல்லியல் சான்றுகள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற பலதரப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாக தமிழ்நாடு அரசு சர்பில் 6ம் கட்ட அகழ்வுப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்கமைவாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த வாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலமாக தொடங்கிஎவைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தொல்லியலாளர்கள் அகழ்வுப் பணியை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ்நாட்டு தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE