Thursday 28th of March 2024 02:49:09 PM GMT

LANGUAGE - TAMIL
லாரியஸ் விருது-2020! ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி, லீவிஸ் தெரிவு!

லாரியஸ் விருது-2020! ஆண்டின் சிறந்த வீரராக மெஸ்ஸி, லீவிஸ் தெரிவு!


விளையாட்டை ஊக்குவிப்பதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுதான், விளையாட்டு உலகின் ஒஸ்கார் என்று கருதப்படும் லாரியஸ் விருது. யேர்மன் தலைநகர் பெர்லினில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை லீவிஸ் ஹமில்டன் மற்றும் லயனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற வீரர்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது லாரியஸ் விருது வழங்கத் தொடங்கி 20 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு எஃப்1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹமில்டன் (இங்கிலாந்து) மற்றும் கால்ப்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி (ஆர்ஜென்ரீனா) ஆகிய இருவருக்கும் அதிகளவான வாக்குகள் போட்டிபோட்டுக் கொண்டு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இருவரும் ஆண்டின் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

லீவிஸ் இரண்டாவது தடவையாக லாரியஸ் விருதை பெற்றுக் கொண்டார். மெஸ்ஸி லாரியஸ் விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

விளையாட்டின் சிறந்த தருணம் (2000-2020) விருது சச்சின் டென்டுல்கருக்கு!

விளையாட்டின் சிறந்த தருணம் (2000-2020) என்ற பிரிவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்காருக்கு வழங்கி கௌரவிக்கபட்டிருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் மிகச் சிறந்த விளையாட்டுத் தருணமாக உலகம் முழுவதிலுமிருந்து விளையாட்டு ரசிகர்களால், 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இவ்விருதுக்கு தெரிவான சச்சினுக்கான லாரியஸ் விருதை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோக் வழங்கியிருந்தார்.

இதன் மூலம் புகழ்பெற்ற லாரியஸ் விருதை வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளமை குறிபபிடத்தக்கது.

அதிக முறை லாரியஸ் விருதை வென்றவர்!

லாரியஸ் விருது கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிக முறையாக லாரியஸ் விருதை 5 முறை வென்றுள்ளார் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவருக்கு ஆடுத்தபடியாக ஜமைக்காவை சேர்ந்த முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட் 4 முறை ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருதை வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE