Thursday 25th of April 2024 01:31:58 AM GMT

LANGUAGE - TAMIL
கனடாவில் கோடை கால பகுதி நேர வேலை தேடுவோர் கவனிக் வேண்டியவை!

கனடாவில் கோடை கால பகுதி நேர வேலை தேடுவோர் கவனிக் வேண்டியவை!


கனடாவில் புதிதாக குடியேறியவர்கள் மற்றும் மாணவர்கள் கோடைகால பகுதிநேர வேலைகளுக்குத் தயாராகிவரும் நிலையில் புதிய வேலைகளில் உள்ள ஆபத்துக்கள் குறித்துக் கவனத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடா இன்னும் குளிரான காலநிலையில் இருந்து விடுபடவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பாடசாலை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோடைகால பகுதி நேர வேலைகளுக்காக இப்போதே தயாராகி வருகின்றனர்.

இதேவேளை, வேலைவாய்ப்புக்களை தேடுவோர் பெரும்பாலும் பணியிட பாதுகாப்பு குறித்துக் கவனிப்பதில்லை.

இதனால் கோடைகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் பணியிடங்களில் காயம் அடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏனைய காலப்பகுதிகளை விட சராசரி நான்கு மடங்கு அதிகரிப்பதை கடந்த கால புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பாதுகாப்பற்ற வேலையை மறுக்கும் உரிமை உட்பட, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்வது முக்கியம் என ஒன்ராறியோ சுகாதார மற்றும் பாதுகாப்பு சங்கங்களின் தலைவரான என்ஸோ கரிட்டானோ தெரிவித்தார்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் வருங்கால முதலாளிகள் குறித்து ஆராய வேண்டும் என உட்கட்டமைப்பு சுகாதார மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான கரிட்டானோ குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறதா? தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து அர்ப்பணிப்போடு செயற்படுகிறதா? என்பன குறித்து ஆராயப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மற்றும் அனுபவமற்ற 15 முதல் 24 வயதுடைய இளம் தொழிலாளர் ; 27 பேர் 2018-ஆம் ஆண்டு பணியிடங்களில் உயிரிழதுள்ளனர் எனவும் புள்ளிவிபரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE