Friday 29th of March 2024 08:38:51 AM GMT

LANGUAGE - TAMIL
இளமை திரும்பிய அஜித்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

இளமை திரும்பிய அஜித்! ரசிகர்கள் மகிழ்ச்சி!


அல்டிமேட் ஸ்டார் அஜித் குமாரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதையடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மனைவி சாலினியுடன் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றமையே அவரது ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகும்.

திரைப்படங்களிலாகட்டும் நடைமுறையிலாகட்டும் இயல்பான நரை விழுந்த கோலத்தில் நடிகர் அஜித் இதுவரை வெளிப்பட்டு வந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பின்னர் இளமை தோற்றத்தில் வெளிப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக 18 வருடங்களுக்கு முன்னர் வில்லன் திரைப்பட காலகட்ட அஜித் போன்று மிகவும் இளமையான தோற்றத்தில் மனைவி சாலினியுடன் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார் அஜித்.

அவரைக்கண்ட ரசிகர்கள் சிலர் எடுத்த புகைப்படத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் மிகவும் மிடுக்காகவும் இளமையாகவும் நிற்பதும் சாலினியுடன் நிற்பது, அங்கிருந்தவர்களுடன் உரையாடுவது என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதனிடையே எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயமேற்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

அதுகுறித்த தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருந்த நிலையில் இப்படங்கள் வெளியாகி இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்துள்ளார் என்பதுடன் புதிய படத்தின் தோற்றத்துடன் வெளிப்பட்டிருப்பதுமாக இரட்டிப்பு மகிழ்ச்சியை கொண்டாடிவருகின்றனர் அவரது ரசிகர்கள். அஜித்தின் இத்தோற்றமானது வரவிருக்கும் படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE