Thursday 28th of March 2024 09:43:58 AM GMT

LANGUAGE - TAMIL
அகரின் ஹட்ரிக் மூலம் தென்னாபிரிக்காவை துவம்சம் செய்தது அவுஸ்ரேலியா!

அகரின் ஹட்ரிக் மூலம் தென்னாபிரிக்காவை துவம்சம் செய்தது அவுஸ்ரேலியா!


தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ரீ-20 போட்டியில் அஷ்ரன் அகரின் ஹட்ரிக் விக்கெட் உதவியுடன் தென்னாபிரிக்காவை துவம்சம் செய்து 107 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜோஹானஸ்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் துடுபெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்ரேலிய அணி சார்பில், ஸ்மித் ஐந்து 4 ஓடங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்கலாக 45 ஓட்டங்களையும், பிஞ்ச் ஆறு 4 ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டத்துடன் 42 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.

இதையடுத்து 197 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கு அதிர்ச்சி கொடுத்தார் அகர். அவுஸ்ரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென்னாபிரிக்க அணி 14.3 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்குள் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. ரீ-20 வரலாற்றில் தென்னாபிரிக்காவின் குறைந்த ஓட்ட பெறுதியாகும்.

அபாரமாக பந்துவீசிய அஷ்ரன் அகர் ஹட்ரிக் முறையில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.

இதன் மூலம் 107 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி அபாரவெற்றி பெற்றது. அதிகூடிய ஓட்ட வித்தியசத்தில் பெற்றுக்கொண்ட இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாக அவுஸ்ரேலியாவுக்கு இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE