Thursday 28th of March 2024 05:39:05 AM GMT

LANGUAGE - TAMIL
அக்கினிச் சிறகுகளைத் தொடர்ந்து ‘காக்கி’ படப்பிடிப்பில் விஜய் அன்டனி!

அக்கினிச் சிறகுகளைத் தொடர்ந்து ‘காக்கி’ படப்பிடிப்பில் விஜய் அன்டனி!


‘அக்கினிச் சிறகுகள்’ படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ள விஜய் அன்டனி ‘காக்கி’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விஜய் அன்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் கதாநாயகர்களாகவும் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் இந்தி நடிகை ரைமா சென் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கும் ‘அக்கினிச் சிறகுகள்’ திரைப்படத்தை இயக்குநர் நவீன் இயக்கியுள்ளார்.

அம்மா கிரியேஷன் சிவா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியல் நடைபெற்றிருந்த நிலையில் கடந்த ஜனவரி-1 முதல் கஜகஸ்தான் நாட்டிலும் நடைபெற்றிருந்தது.

விஜய் அன்டனி, அருண் விஜய், அக்ஷரா ஹாசன் மற்றும் சென்ட்ராஜன் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. உறைபனிக்கு நடுவே இவர்கள் குதிரைச் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. ஐம்பது நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இப்படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அண்மையில் விஜய் அன்டனி திரும்பியிருந்தார்.

இந்நிலையில், ‘வாய்மை’ பட இயக்குநர் செந்தில்குமார் இயக்கி தயாரிக்கும் ‘காக்கி’ படத்திலும் விஜய் அன்டனி கதாநாயகனாக நடிக்கிறார். சென்னையில் படமாக்கப்பட்டுவரும் அப் படத்தின் சண்டைக் காட்சிகளில் விஜய் அன்டனி இணைந்துள்ளார்.

இப்படத்தல் சத்தியராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதேவேளை, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் அன்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘தமிழரசன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ரம்மியா நம்பீசன், மலையாள நடிகர் சுரேஸ் கோபி, சோனு சூட், சங்கீதா, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE