Tuesday 23rd of April 2024 02:21:13 AM GMT

LANGUAGE - TAMIL
அவுஸ்ரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது தெ.ஆபிரிக்கா!

அவுஸ்ரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது தெ.ஆபிரிக்கா!


அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது தென்னாபிரிக்க அணி. அவுஸ்ரேலியா நிர்ணயித்த 272 வெற்றி இலக்கை மாலனின் கன்னிச் சதத்தின் உதவியுடன் கடந்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வென்றது தென்னாபிரிக்க அணி.

அவுஸ்ரேலியா - 271!

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 271 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்து. அவுஸ்ரேலிய அணி சார்பில் பிஞ்ச் மற்றும் ஷோட் ஆகியோர் தலா 69 ஓட்டங்களையும், மார்ஷ்-36, டேவிட் வோர்னர்-35 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றிருந்தனர்.

லுங்கி நிகிடி 6 விக்கெட்!

பந்துவீச்சில் லுங்கி நிகிடி 10 ஓவர்கள் பந்துவீசி 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

ஆரம்பத்தில் தடுமாறிய தெ.ஆபிரிக்கா!

272 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஒரு ஓட்டத்தை பெற்ற நிலையில் அணித்தலைவர் குயின்டன் டீ கொக்கை ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழக்கச் செய்திருந்தார் ஸ்டார்க். அடுத்து வந்த ஸ்மட்ஸ் 41 ஓட்டங்களையும்,

மாலன் கன்னிச் சதம்!

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இரண்டாவது போட்டியிலேயே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சதமடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மாலன். கடந்த 29ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்த மாலன் அப்போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருந்த போதிலும், அதே அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர்களை கலங்கடித்து இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்ததுடன் இக்கட்டான நேரத்தில் நிலைத்து நின்று ஆடி அணியின் வெற்றிக்கு காரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த மாலன் 140 பந்துகளை சந்தித்து நான்கு 6 ஓட்டங்களையும், ஏழு 4 ஓட்டங்களையும் உள்ளடக்கி 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவருடன் இணைந்து அனுபவ வீரர் டேவிட் மில்லர் 37 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE