Tuesday 23rd of April 2024 01:36:54 AM GMT

LANGUAGE - TAMIL
ஐ.தே.கவைப் பிளவுபடுத்துவது   சஜித் தரப்பின் நோக்கமில்லை!

ஐ.தே.கவைப் பிளவுபடுத்துவது சஜித் தரப்பின் நோக்கமில்லை!


"ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கில்லை. மாறாக ஒரே அணியாகப் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கப்பாடு காணப்படும் என நாம் நம்புகின்றோம்."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நுகேகொடையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

"நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் நியமனக்குழு அமைக்கப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், இதற்காக விண்ணப்பங்கள் கிடைத்தவண்ணமுள்ளன. இந்நிலையில், எமது கட்சியுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமையவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதில் அதிகமாக ஐ.தே.கவைச் சேர்ந்தோரே அங்கத்துவம் வகிக்கின்றனர்.

அத்துடன், கூட்டணியின் சின்னம் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியது. யானை மற்றும் அன்னம் சின்னங்களுக்கு விருப்புக் காணப்பட்டது. யானை சின்னத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில் அதற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்த வேளையில் கடந்த மூன்று மாத காலமாக இழுபறி நிலை காணப்பட்டது. ஆகவேதான் அனைவரும் இணைந்து பொதுச் சின்னமொன்றில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்தோம்.

எமது கட்சிக்கென்று சின்னமொன்று உண்டு. ஆயினும், பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதன் ஊடாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வைக் காணக்கூடியதாக இருக்கும். அந்தவகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE