Friday 19th of April 2024 01:13:36 AM GMT

LANGUAGE - TAMIL
இயக்குநராக மாறிய விஜய்!

இயக்குநராக மாறிய விஜய்!


லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஒருநாள் காட்சி முழுவதையும் இயக்குநராக இருந்து நடிகர் விஜய் இயக்கியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இயக்குநர் ரத்னகுமார் மற்றும் மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஸ் கனகராஜ் ஆகிய இருவரும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவு கருவிக்கு முன்னால் நடிக்க இருந்ததால் அக்காட்சியை இளைய தளபதி விஜய் இயக்கியுள்ளார்.

இவ்விரு இயக்குநர்களும் நடித்த காட்சியை ‘ஆக்ஷன்’ சொல்லி தொடங்கி வைத்ததில் இருந்து ஒளிப்பதிவு கருவி கோணங்களையும் நெறிப்படுத்தி ஒருநாள் முழுக்க இயக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE