Wednesday 24th of April 2024 10:44:51 PM GMT

LANGUAGE - TAMIL
விஷாலின் துப்பறிவாளன்-2 முதல் பார்வை வெளியாகியது!

விஷாலின் துப்பறிவாளன்-2 முதல் பார்வை வெளியாகியது!


நடிகர் விஷால் நடித்து இயக்கும் துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் முதல்பார்வை விளம்பரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநரும், நடிகருமான விஷால் தனது ருவிட்டர் பக்கத்தில் நேற்று புதன் கிழமை மாலை வெளியிட்டு வைத்துள்ளார்.

2017 இல் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்திருந்த துப்பறிவாளன் படத்தின் பாகம் 2 இல் இசைஞானி இளையராஜாவும் இணைவதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்கள் லண்டனில் நடைபெற்றிருந்த நிலையில் இயக்குநர் மிஷ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இந்த விரிசலால் துப்பறிவாளன்-2 இல் இருந்து மிஷ்கின் வெளியேறினார்.

இதையடுத்து இப்படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில்தான் நேற்று மாலை விஷால் தனது ருவிட்டர் பக்கத்தில் துப்பறிவாளன்-2 திரைப்படத்தின் முதல்பார்வை விளம்பரத்தை வெளியிட்டு வைத்துள்ளார்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE