Thursday 25th of April 2024 06:53:19 AM GMT

LANGUAGE - TAMIL
அவுஸ்ரேலிய வீரருக்கு கொரோனா அறிகுறி!

அவுஸ்ரேலிய வீரருக்கு கொரோனா அறிகுறி!


அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறிகள் தேன்றியதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் 14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய நிலையில் நியூசிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் ஆட்டத்தின் போது கடுமையான தொண்டை வறட்சி ஏற்பட்டதையடுத்து போட்டியில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதையடுத்து நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரது பரிசோதனை முடிவுகள் வரும்வரை அவருக்கான சிகிச்சைகள் தொடரம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைந்து அவுஸ்ரேலிய அணிக்கு திரும்புவார் என்று நம்புவதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE