Friday 29th of March 2024 02:01:05 AM GMT

LANGUAGE - TAMIL
1-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

1-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!


சுற்றுலா நியுசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றுள்ளது அவுஸ்ரேலிய அணி.

சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பில், டேவிட் வோர்னர்-67, ஒரேஞ் பிஞ்ச்-60 மற்றும் லபுசாக்னே-56 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில் இஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், சாண்ட்னர் மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

259 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாது அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அவுஸ்ரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது 41 ஓவர்களில் 187 ஓட்டங்களை மட்டும் எடுத்து 71 ஓட்டங்களால் தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணி சார்பில் மார்ட்டின் குப்தில்-40, ரொம் லதொம்-38 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்று ஆட்டமிழந்திருந்தனர். பந்து வீச்சில், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஹாசில்வூட் மற்றும் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மிட்சல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE