Tuesday 16th of April 2024 02:10:30 AM GMT

LANGUAGE - TAMIL
பிரான்ஸில் அவசர நிலை அறிவிக்கப்படுமா?  பாரிஸ் நகரமும் முற்றாக முடக்கப்படும் நிலை!

பிரான்ஸில் அவசர நிலை அறிவிக்கப்படுமா? பாரிஸ் நகரமும் முற்றாக முடக்கப்படும் நிலை!


பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 36 போ் உயிரிழந்தனா்.

புதிய இறப்புக்களுடன் அங்கு இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 127-ஆக அதிகரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை வரையான உத்தியோகபூா்வ தகவல்களின் பிரகாரம் பிரான்ஸில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5437-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க இத்தாலி போன்று மிகவும் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது.

வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவர் வரன் பிரான்ஸ் 2 தொலைக்காட்சிக்கு நேற்று வழங்கிய நோ்காணலில் தெரிவித்தார்.

கடுமையான சமூக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மதித்துப் பேணுமாறு பிரெஞ் பிரஜைகளைக் கோருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாரிஸ் உள்ளிட்ட இரண்டு பிரெஞ்சு பிராந்தியங்கள் இந்த வாரம் முழுமையான தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கபடலாம் என ஜேர்னல் டு டிமான்ச் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தொற்றுநோய் பரவில் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இராணுவத்தைக் களமிறக்கவும் நாடு தயாராகி வருவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் பாதுகாப்புப் பேரவை இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு எலிசி அரண்மனையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் எட்வார்ட் பிலிப் ஆகியோரின் பிரசன்னத்துடன் கூடி கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளது.

இந்தத் சந்திப்பைத் தொடா்ந்து பாரிஸ் நகரம் உள்ளிட்ட இரண்டு பிரெஞ்சு பிராந்தியங்களை முடக்கும் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE