;

Monday 28th of September 2020 09:26:53 PM GMT

LANGUAGE - TAMIL
Astrology
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -25.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -25.03.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 12ம் திகதி, ரஜப் 29ம் திகதி, 25.3.2020 புதன்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி மாலை 5:37 வரை, அதன் பின் துவிதியை திதி, ரேவதி நட்சத்திரம் நாள் முழுவதும், மரணயோகம்.

நல்ல நேரம் :காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை மணி 10.30 முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : உத்திரம் • பொது தெலுங்கு புத்தாண்டு, பெருமாள் வழிபாடு

-

மேஷம்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளிடம் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார் . புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தி யோகத்தில் புது பொறுப்பினை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத் தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத் துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி உறுதி மொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்பு கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளை யும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோ தர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.

தனுசு

தனுசு: அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு ஓய்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரி தாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


Category: ஜோதிடம், பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE