Thursday 18th of April 2024 09:08:59 PM GMT

LANGUAGE - TAMIL
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 647 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 647 ஆக அதிகரிப்பு!


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக இன்று புதிதாக 76 பேர் உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இரவு 10.00 மணி நிலவரத்தின் அடிப்படையில் 593 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 43 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களது எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, மகாராட்ஷ்ராவில் 122, கேரளா - 118 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுடன், கர்நாடகா - 51, தெலுங்கானா - 41, குஜராத் - 38, உத்தரபிரதேசம் - 38, ராஜஸ்தான் - 36, டெல்லி - 35, அரியானா - 31, பஞ்சாப் - 31, தமிழ்நாடு - 23, மத்திய பிரதேசம் - 14, லடாக் - 13, ஜம்மு-காஷ்மீர் - 11, மேற்கு வங்கம் - 9, ஆந்திரபிரதேசம் - 8, சண்டீகர் - 7, உத்ரகாண்ட் - 5, பீகார் - 4, இமாச்சல பிரதேசம் - 3, சட்டீஸ்கர் - 3, ஒரிஷா - 2, புதுச்சேரி - 1, மணிப்பூர் - 1, மிஷோரம் - 1 ஆகிய 25 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE