Tuesday 23rd of April 2024 03:51:24 PM GMT

LANGUAGE - TAMIL
Astrology
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -26.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -26.03.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 13ம் திகதி, ரஜப் 30ம் திகதி, 26.3.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி இரவு 7:32 வரை, அதன்பின் திரிதியை திதி, ரேவதி நட்சத்திரம் காலை 7:09 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.

நல்ல நேரம் :காலை மணி 10.30 முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. • சூலம் : தெற்கு

• பரிகாரம் : தைலம் • சந்திராஷ்டமம் : அஸ்தம் • பொது சந்திர தரிசனம், தட்சிணாமூர்த்தி வழிபாடு. - மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினைகள் வந்து செல்லும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபரியில் போய் முடியும். சிலர் உங்களை தாழ்த்தி பேசினாலும் கலங்காதீர்கள். சகோதரர்களை பகைத்து கொள்ள வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் அணுகுமுறை மற்றவர்களுக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாச மழை பொழியும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சிக்கு மதிப்பு கூடும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல்பார்த்துக் கொள்ளுங்கள். கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர் பாராத நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறி முகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள் மனம் நிறைவு பெறும் நாள்.

மகரம்

மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். த்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்--மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனேமுடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


Category: ஜோதிடம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE