Wednesday 24th of April 2024 01:49:12 AM GMT

LANGUAGE - TAMIL
சேவைகள் பெறமுடியாது அசௌகரியமா?  ஜனாதிபதி செயலகத்தில் முறையிடலாம்!

சேவைகள் பெறமுடியாது அசௌகரியமா? ஜனாதிபதி செயலகத்தில் முறையிடலாம்!


தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் செயற்படுதல் குறித்த முறைப்பாடுகளை 011-4354550 / 0114354655 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியாது போனால் அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு 3872/ 3873/ 3874/ 3875 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

மக்கள் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கபில குணசிங்கவை (077-3743718) என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்துவதற்காக 0112860003 / 0112860004 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.

0112354354 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு 3355 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் இந்த தகவல்களை தெரிவிக்க முடியும்.

மக்கள் வழங்கும் தகவல்களை குறித்த துறைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வழங்கும் உத்தரவுகள், பணிப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE