Thursday 18th of April 2024 06:45:24 AM GMT

LANGUAGE - TAMIL
இத்தாலியில்  நேற்று 663 பேரை  பலியெடுத்தது கொரோனா வைரஸ்!

இத்தாலியில் நேற்று 663 பேரை பலியெடுத்தது கொரோனா வைரஸ்!


இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 662 பேர் நேற்றிரவு வரையான 24 மணி நேரங்களில் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த கொரோனா வைரஸ் இறப்புக்கள் 8,165 ஆக அதிகரித்துள்ளதாக இத்தாலிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் புதன்கிழமை 683 பேர் இறந்தனர். செவ்வாயன்று 743 பேர், திங்களன்று 602 பேர், ஞாயிற்றுக்கிழமை 650 போ், சனிக்கிழமையன்று 793 போ் உயிரிழந்தனா்.

ஒரு வாரமாக 600 முதல் 800 வரையான உயிரிழப்புக்கள் தொடா்ச்சியாக இத்தாலியில் பதிவாகி வருகின்றன.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 539 ஆக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் முதலில் பாதிக்கப்பட்டவர்களில், 10,361 பேர் வியாழக்கிழமை முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இத்தாலியின் தலைநகரான மிலனை உள்ளடக்கிய லோம்பார்டியின் வடக்கு பிராந்தியத்தில் நேற்று ஒரே நாளில் 2500 போ் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு பிராந்திய ஆளுநர் அட்டிலியோ ஃபோண்டானா தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக இந்தளவு பெரிய எண்ணிக்கை ஒரே நாளில் செங்குத்தாக அதிகரித்துள்ளது. இது நல்ல அறிகுறியல்ல. என ஃபோண்டானா செய்தியாளர்களிடம் கூறினார்.


Category: உலகம், பகுப்பு
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE