;

Sunday 31st of May 2020 07:34:41 PM GMT

LANGUAGE - TAMIL
நடிகர் சேதுராமன் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகர் சேதுராமன் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்


நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று(மார்ச் 26) இரவு மாரடைப்பால் காலமானார்.

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இதை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். தமிழில் வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.

சென்னையில் பணியாற்றி வந்த இவர், மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதேவேளை 36 வயதே நிரம்பிய சேதுராமன் உயிரிழந்தமையானது திரைத்துறையினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சேதுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பிரபலங்களின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Category: சினிமா, பகுப்பு
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE