Friday 29th of March 2024 07:02:27 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
சென்னையில் 9 இடங்களில் கொரோனா பரவும் அபாயம்!

சென்னையில் 9 இடங்களில் கொரோனா பரவும் அபாயம்!


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் 9 இடங்களில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கெடுக்கும் பணியும் நேற்று நடைபெற்றது.

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரத்துறை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சளி, இருமல், காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டது.

சென்னையில் ஏற்கனவே மண்டலம்-8 அண்ணா நகர் பிரிவில் அரும்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் கொரோனா வைரசால் 5 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

இதேபோல் மண்டலம்-9 தேனாம்பேட்டை பிரிவில் சாந்தோம் பகுதியில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் அந்த பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்டலம்-10 கோடம்பாக்கம் பிரிவில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர வளசரவாக்கம் மண்டலத்தில் போரூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அப்பகுதி மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி பிரசாரம் செய்யப்பட்டது.

இதுதவிர ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதால் அப்பகுதி மக்களும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது என்று வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மேற்கண்ட 9 இடங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் அவர்களது வீடுகளில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் சுகாதாரத்தை பேணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று யாருக்கெல்லாம் வந்துள்ளதோ அந்த பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் கண்காணிப்பு வளையம் உருவாக்கி வீடு வீடாக மற்றும் வீதி வீதியாக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE