Saturday 20th of April 2024 08:03:34 AM GMT

LANGUAGE - TAMIL
இத்தாலி தூதரகம்
இத்தாலியில் இடம்பெறும் இறுதிச் சடங்குகள் தொடர்பில் தூதரகம் அறிக்கை!

இத்தாலியில் இடம்பெறும் இறுதிச் சடங்குகள் தொடர்பில் தூதரகம் அறிக்கை!


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலி குடியரசின் தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இத்தாலியின் கோவிட் - 19 நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக இத்தாலிய தூதரகம் தெளிவுபடுத்த விரும்புகிறது.

இத்தாலியின் ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும், இத்தாலி மக்கள் நிர்வாணமாகவும், மதச் சடங்குகள் இல்லாமலும் புதைக்கப்படுகின்றனர் என்று வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது ஆகும். இறுதிச்சடங்குகளில் பொது மக்கள் கலந்து கொள்ள இடமளிக்கவில்லை என்பது உண்மையாகினும், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அனபுக்குரியவர்கள் என மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்களுடன் பாதிரியாரின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்த ஒவ்வொரு உடலும் (ஒரு சவப்பெட்டியில் அல்லது ஒரு சில சமயங்களில் அவரது சாம்பல்) தனித்தனியாக அனைத்து மரியாதையுடனும் விரும்பிய மதச்சடங்குகளுடனும் மற்றும் சட்டங்களுக்கமையவும் இறந்தவருக்கு மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இது இத்தாலி கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வழக்கமாகும். அண்மைக்கால செய்தி வெளியீடுகளில் குறிப்பிடப்பட்ட, இத்தாலியிலிருந்து திரும்பி வந்தவர்கள் இந்த தூதரகத்திலிருந்து விசாவினைப் பெற்றுக்கொள்ளவில்லை அல்லது கோரவில்லை என்பதனை நாம் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம். அதே சமயம் எமது இலங்கை நண்பர்கள் பலரும் எமக்களித்த ஏராளமான ஆதரவுக்கு எமது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE