Saturday 20th of April 2024 05:00:22 AM GMT

LANGUAGE - TAMIL
மாவட்ட அரச அதிபர்
வர்த்தகர்கள் விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி!

வர்த்தகர்கள் விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி!


ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வியாபாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்ற வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (30) காலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது மாவட்டத்திற்கு வெளியே சென்று பொருட்களை கொள்வனவு செய்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு விசேட பாஸ் அனுமதி ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொள்ளவுள்ள மொத்த வியாபாரிகள் தங்களின் விபரங்களுடன் கிராம அலுவலர் உறுதிப்படுத்தல் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஊடாக சுகாதார மருத்துவ அதிகாரி( எம்ஓஎச்) உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலகம் ஊடாக மாவட்டச் செயலகத்திடம் அனுமதி பெற்று பொலிஸாரிடம் குறித்த பாஸ் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட கிருமிநாசினிகளை ஊரடங்கு காலத்தில் நடமாடும் சேவை மூலம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.

அத்தோடு, விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களம் தற்போது விசேட பாஸ் அனுமதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதனை விவசாயிகள் தங்களது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்று கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடனும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

உத்தியோகத்தர்களின் போக்குவரத்து தொடர்பிலும் பேசப்பட்டது. எனவும் குறிப்பிட்டார்.

மாவட் அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றக் இக் கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், கமநல உதவி ஆணையாளர், சமுர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE