Friday 29th of March 2024 03:22:37 AM GMT

LANGUAGE - TAMIL
வெளிநாட்டவர்களுக்கான அறிவித்தல்!
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கான அறிவித்தல்!

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கான அறிவித்தல்!


இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான வீசா காலத்தினை நீடிப்பது தொடர்பில் இலங்கை குடிவரவு - குடியல்வு திணைக்களம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கான வீசாக்களை நீடிப்பது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் 2020.03.17ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு மேலதிகமாக,

அதன் படி பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடி காலம் 2020 மார்ச் 14 முதல் 2020 ஏப்ரல் 12 வரை 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கோவிட் - 19 வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு தற்போத இலங்கையில் தரித்திருக்கும் வெளிநாட்டினர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையான வீசாக்களுக்குமான செல்லுபடி காலத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. தற்சமயம் வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான வீசாக்களின் செல்லுபடி காலம் 2020 மே 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2. வீசா நீடிப்புடன் செலுத்துதல் மற்றும் கடவுச்சீட்டில் புறக்குறிப்பு இடுதல் பற்றி கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை தொடர்பாக கால கிரமத்தில் அறிவிக்கப்படும். எனவே, முன்னைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு இத்தால் உங்களுக்கு தொடர்ந்தும் அறியத்தருகிறோம்.

3. இக்காலப் பகுதியில் நீங்கள் தீவை விட்டு வெளியேற விரும்பினால் எந்தவொரு அபராதமும் இன்றி விமான நிலையத்தில் வீசா கட்டணத்தை செலுத்துவதன் மூலம் உங்களுக்கு நாட்டைவிட்டு வெளியேற முடியும்.

4. நீங்கள் வீசாக்களை பெறுவதற்காக உங்களது கடவுச்சீட்டுக்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா பிரிவிடம் ஏற்கனவே ஒப்படைத்திருப்பின் அங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் செல்லுபடி காலமும் மேலும் 30 நாட்களுக்கு அதாவது 2020 மே 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் மட்டும் உங்களது கடவுச் சீட்டை இத் திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக, குறித்த பற்று சீட்டினதும் விமானப் பயணச்சீட்டினதும் நிழற் பிரதிகளை கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும் என்பதுடன் இது சம்பந்தமாக தேவையான அறிவுறுத்தல்களை திணைக்களம் அவ்வப்போது உங்களுக்கு வழங்கும்.

1. dcvisa@immigration.gov.lk

2. acvisa@immigration.gov.lk

3. acvisa1@immigration.gov.lk

4. acvisa2@immigration.gov.lk

5. aceta@immigration.gov.lk

மேலதிக விசாரணைகளுக்கு - 0771588724

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்களுக்கு அமைய இவ் அறிவித்தல் வெளியிடப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE