Friday 29th of March 2024 05:41:13 AM GMT

LANGUAGE - TAMIL
அமெரிக்காவில் கொரோனா
அமெரிக்காவில் கொரோனா மரணம் 4,000 ஐ கடந்தது!

அமெரிக்காவில் கொரோனா மரணம் 4,000 ஐ கடந்தது!


சீனாவில் தொடங்கி உலகெங்கும் வியாபித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாகி அமெரிக்காவில் நேற்று மட்டும் 912 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு அதிகூடிய இறப்பில் முதலிடத்தில் இருந்த சீனாவை தற்போது 5 வது இடத்திற்கு பின்தள்ளி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னேறியுள்ளனர்.

தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 428 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம் அதிகூடிய இறப்பு ஏற்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. அடுத்த படியாக ஸ்பெயினில் 8 ஆயிரத்து 464 பேரும், அமெரிக்காவில் 4 ஆயிரத்து 53 பேரும், பிரான்சில் 3 ஆயிரத்து 523 பேரும் உயிரிழந்துள்ளதன் மூலம் 2, 3, 4 ஆகிய இடங்களில் உள்ளன.

கொரோனா வைரசுக்கு உலகளாவிய ரீதியில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 42 ஆயிரத்து 302 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE