Friday 19th of April 2024 06:19:47 AM GMT

LANGUAGE - TAMIL
இரண்டாம் எலிசபெத்
4 ஆவது தடவையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரிட்டன் மகாராணி!

4 ஆவது தடவையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரிட்டன் மகாராணி!


கொரோனா நெருக்கடி காரணமாக பிரிட்டன் எதிர்கொண்டுள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு மகாராணி இரண்டாம் எலிசபெத் நாட்டுமக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பிரிட்டன் மகாராணி தனது உரையை நிகழ்த்துவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

93 வயதாகும் இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 68 ஆண்டு முடிக்குரிய அதிகார காலத்தில் நாட்டு மக்களுக்காக உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக, 1991 ல் நடந்த முதல் வளைகுடாப் போரிலும், 1997 இல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்கிலும், 2002 ல் அன்னை ராணியின் மரணத்திலும் மட்டுமே அவர் பொது உரையாற்றினார்.

பக்கிங்ஹாம் அரண்மனை ஊழியரிடமிருந்து கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ராணி தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவரது சிறப்பு பேச்சு விண்ட்சர் அரண்மனையில் பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்தலைக் கழித்த பின்னர் இன்று முதல் முறையாக பொது இடத்தில் தோன்றினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE