Saturday 20th of April 2024 10:06:49 AM GMT

LANGUAGE - TAMIL
விசமிகள் பரப்பிய வதந்தி
வற்றாப்பளை அம்மனின் பெயரால் விசமிகள் பரப்பும் வதந்தி!

வற்றாப்பளை அம்மனின் பெயரால் விசமிகள் பரப்பும் வதந்தி!


வற்றாப்பளை அம்மன் குருக்களின் கனவில் தெரிவித்ததாக தெரிவித்து விசமிகள் சிலர் முக நூல் ஊடாக பரப்பிய வதந்தியை நம்பி ஏமாறும் மக்கள் கோதுமை மா, அரிசிமா, மஞ்சள் மா உட்பட்டவற்றில் விளக்கு செய்து தீபம் ஏற்றிவருகின்ற துயரமான சம்பவம் இடம்பெற்றுவருகின்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மாவின் புதுமை என்ற பெயரில் முகநூல் ஊடாக வதந்தி ஒன்று பரப்பப்பட்டுவருகின்றது.

குருக்களின் கனவில் தோன்றிய அம்மன் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்கு தாங்கள் குறிப்பிடுகின்ற முறையில் வழிபடவேண்டும் என்று தெரிவித்து குறித்த முகநூல் வதந்தி பரப்பப்பட்டுவருகின்றது.

இதனை அடுத்து குறித்த முகநூல் வதந்தியை நம்பவேண்டாம் என்றும் தமக்கு அவ்வாறு எதுவும் தெரியாது என்றும் வற்றாப்பளை அம்மன் ஆலய குருக்கள் அறிவித்துள்ளார்.

இருப்பினும் பல இடங்களில் முகநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அப்பாவி மக்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை அந்தக் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE