Thursday 25th of April 2024 11:34:35 AM GMT

LANGUAGE - TAMIL
டேனியல் பாலாஜி
கவுதம்மேனன் என்னை கொன்று விட்டார் - டேனியல் பாலாஜி!

கவுதம்மேனன் என்னை கொன்று விட்டார் - டேனியல் பாலாஜி!


வேட்டையாடு விளையாடு படத்தின் முதல்பாகத்தில் கவுதம் மேனன் என்னை கொன்றுவிடார் என நடிகர் டேனியல் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் பெயரெடுத்த டேனியல் பாலாஜிடம் வேட்டையாடு விளையாடு படத்தின் பாகம் 2 இல் நடிப்பீர்களா எனக் கேட்டபோதே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜி வில்லனாக நடித்திருந்தார். தற்போது கவுதம் மேனன்-கமல் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு பாகம் 2 எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் வேட்டையாடு விளையாடு பாகம் 2 இல் நடிப்பீர்பகளா என டேனியல் பாலாஜியிடம் கேட்டக்கப்பட்டபோது இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கவுதம் மேனன் முதல் பாகத்திலேயே என்னைக் கொன்று விட்டார். அதனால் 2ம் பாகத்தில் எனக்கு வேலை இருக்காது என்று நினைக்கிறேன் என டேனியல் பாலாஜி தெரிவித்திருந்தார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE