Thursday 18th of April 2024 08:08:37 PM GMT

LANGUAGE - TAMIL
கீர்த்தி சுரேஷ்
தொழிலதிபர் மகனுடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம்?

தொழிலதிபர் மகனுடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம்?


நடிகை கீர்த்தி சுரேசுக்கும் தொழில் அதிபர் மகனுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் அதனை மறுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக படங்கில் நடித்து வருகின்றார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக தெலுங்குப் படமொன்றில் நடிக்க இருக்கின்றார்.

இந்நிலையில் அவரு திருமணம் குறித்த தகவல்கள் உலாவந்துள்ளது. கீர்த்தி சுரேசுக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்நத தொழில் அதிபர் ஒருவரின் மகனையே கீர்த்தி சுரேசுக்கு வரனாக பார்த்துள்ளதாகவும் தகவல்கள் உலாந்துள்ளன.

இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கருத்து தெரிவிக்கையில், இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. இது எப்படித்தான் துவங்கியது என்று தெரியவில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை என்று கூறி அந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE