;

Monday 25th of May 2020 09:04:30 PM GMT

LANGUAGE - TAMIL
ராசிபலன்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 08.04.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? - 08.04.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 26ம் திகதி, ஷாபான் 13ம் திகதி, 8.4.2020 புதன்கிழமை, தேய்பிறை, பவுர்ணமி திதி காலை 8:53 வரை, அதன்பின் பிரதமை திதி, அஸ்தம் நட்சத்திரம் காலை 6:41 மணி வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:30 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம், மரண - சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி பொது: விஷ்ணு வழிபாடு

மேஷம்

மேஷம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். காரியசித்தி ஆகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தின் வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். பணப்பற்றாக்குறை வந்தாலும் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.

கடகம்

கடகம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைகாட்டுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நிறைவான நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிறப்பான நாள்.

தனுசு

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவார்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சொந்தபந்தங்களால் அன்புத்தொல்லைகள் உருவாகும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்லன நடக் கும் நாள்.


Category: ஜோதிடம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE