Wednesday 24th of April 2024 06:54:51 PM GMT

LANGUAGE - TAMIL
அப்துல் மாபூத் சவுத்ரி
மருத்துவா்களுக்கு ஆபத்தென எச்சரித்த  மருத்துவா்;  கொரோனா தொற்றால் பலி!

மருத்துவா்களுக்கு ஆபத்தென எச்சரித்த மருத்துவா்; கொரோனா தொற்றால் பலி!


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் போதிய பாதுகாப்பு அங்கிகள் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரித்து பிரதமா் போரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் எழுதிய 53 வயதான வைத்திய நிபுணா் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்தார்.

53 வயதான அப்துல் மாபூத் சவுத்ரி என்ற வைத்திய நிபுணரே கடந்த 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தவராவார்.

தொற்று நோயியல் பிரிவில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதார பணியாளா்களுக்கும் தேவையான பாதுகாப்பு கவசங்களை பெற்றுக்கொடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதம் இவர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சுகாதாரப் பணியாளர்களுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் உள்ளன. இந்த நோய் நெருக்கடி தணிந்ததும் இந்த உலகில் மற்றவா்களோடு இணைந்து மகிழ்ச்சியாக வாழும் உரிமை எங்களுக்கும் உள்ளது என அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தார்.

உரிய பாதுகாப்பு அங்கிகள் இன்றி ஒவ்வொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளா்களுக்கும் சிகிச்சையளிக்கும்போது பலிக்குச் செல்லும் ஆடுகள் போன்றே உணா்வதாக மற்றொரு சிரேஷ்ட மருத்துவா் கருத்து வெளியிட்டிருந்தார்.

பொருத்தமற்ற பாதுகாப்பு அங்கிகள் இல்லாமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடல்கள் மற்றும் வாய்களைச் சுற்றி குப்பைத் தொட்டிகளை அணிந்துள்ளனர் என மற்றொரு மருத்துவா் குறிப்பிட்டார்.

பிரித்தானிய மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ரினேஷ் பர்மர் பாதுகாப்பு அங்கிகள் இல்லாததால் மிகப் பெரும் சிக்கல்களை மருத்துவ பணியாளா்கள் எதிர்நோக்கி வருவதாக கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தார்.

தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அஞ்சுவதாக நாட்டிலுள்ள 50 வீதமான மருத்துவா்கள் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.

ஒரு முறை அணிந்த முகக் கவசங்களை மருத்துவா்கள், செவிலியா்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் நாளுக்கு ஒரு முகக் கவசத்தையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த அவா்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டார்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அங்கிகள் உண்மையிலேயே பாதுகாப்பானதா என்று தெரியாமல் பல செவிலியா்கள் வேலை செய்கின்றனா் எனவும் அவா் கூறியிருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE